Author: Deepika

Posted on: April 22, 2024 Posted by: Deepika Comments: 0

RTE: Admission in Private Schools – Apply From Today

RTE: தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை-இன்று முதல் விண்ணப்பிக்கலாம் RTE இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-ன் கீழ், குழந்தைகளுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தமிழகம் முழுவதும் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 % ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை அளிக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை கல்விக்கட்டணம் செலுத்தும் வகையில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று தொடக்கம். 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் மே 20-ந் தேதி ஆகும். விண்ணப்பப் பதிவு…

Posted on: April 22, 2024 Posted by: Deepika Comments: 0

Madurai Chitrai Festival: Devotees Welcome Kallazakar by Performing Counter Service

மதுரை சித்திரை திருவிழா: எதிர்சேவை செய்து கள்ளழகரை வரவேற்ற பக்தர்கள் Madurai Chitrai Festival மதுரைக்கு வடக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் பிரசித்திபெற்ற அழகர் கோவில் இயற்கை எழிலுடன், வற்றாத நூபுரகங்கையுடன் அமைந்துள்ள கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா கோவிந்தா கோஷம் முழங்க எதிர்சேவை செய்து கள்ளழகரை திரளான பக்தர்கள் வரவேற்றனர். முத்திரை நிகழ்ச்சி சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியாக நாளை வைகை ஆற்றில் தங்கக்குதிரையில் வீற்றிருந்து கள்ளழகர் இறங்கும் தனி பெருமையுடைய தாகும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவானது கடந்த 19-ந்தேதி தொடங்கியது. 3-ம் நாள் விழாவான நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மாலையில், அலங்கரிக்கப்பட்ட…

Posted on: April 22, 2024 Posted by: Deepika Comments: 0

4 Year Bachelor Degree : Ph.D. Admission to Study – UGC Notification

4 ஆண்டு இளங்கலை பட்டம் : பிஎச்.டி. படிப்பிற்கு அனுமதி – யு.ஜி.சி அறிவிப்பு 4 Year Bachelor Degree கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர பிஎச்.டி. ஆய்வுப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நெட் – தேசிய தகுதி தேர்வு, செட் – மாநில தகுதி தேர்வு ஆகிய ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி. ஆய்வுப்படிப்பில் சேர முதுகலை பட்டம் அவசியம் என்ற நிலையில் 75 % மதிப்பெண்களுடன் 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், (4 Year Bachelor Degree) நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரலாம் என யுஜிசி தற்போது அறிவிப்பு…

Posted on: April 20, 2024 Posted by: Deepika Comments: 0

Chitra Pournami: Tamil Nadu Transport Corporation Announces Operation of Special Buses to Tiruvannamalai

சித்ரா பவுர்ணமி:  திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு Chitra Pournami சித்ரா பவுர்ணமியை (Chitra Pournami) முன்னிட்டு திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22 மற்றும் ஏப்ரல் 23  ஆகிய 2 நாட்களில் சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கவும், சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து ஏப்ரல் 22…

Posted on: April 20, 2024 Posted by: Deepika Comments: 0

First Phase Lok Sabha Elections – 72.09% Voter Turnout in Tamil Nadu

முதல்கட்ட மக்களவை தேர்தல் – தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு Lok Sabha Elections நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் (Lok Sabha Elections) 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக, தமிழகத்தின் 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி  இடைத்தேர்தலும் நேற்று நடந்தது. அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு தமிழகத்தின் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இத்தேர்தலில், 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள்,…

Posted on: April 20, 2024 Posted by: Deepika Comments: 0

India’s Indigenously Manufactured BrahMos Missile Exported to the Philippines

“பிரம்மோஸ் ஏவுகணை” பிலிப்பைன்ஸுக்கு ஏற்றுமதி செய்த இந்தியா BrahMos Missile Exported இந்தியா – ரஷ்யா கூட்டு சேர்ந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கி பிரம்மோஸ் ஏவுகணைகளை (BrahMos Missile Exported) தயாரித்த நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை முதல் முறையாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நேற்று ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்தியா – ரஷ்யா கூட்டு சேர்ந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கி பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்தன. இந்தியாவின் பிரம்மபுத்ரா நதி மற்றும் ரஷ்யாவின் மோஸ்க்வா நதி ஆகிவற்றின் பெயர் சேர்க்கப்பட்டு “பிரம்மோஸ்” பெயர் உருவாக்கப்பட்டது. நிலம், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும்…

Posted on: April 20, 2024 Posted by: Deepika Comments: 0

Tanjore’s Great Temple Chithirai Festival!

கோலாகலமாக நடைபெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா! Tanjore’s தஞ்சை (Tanjore’s) பெரிய கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 18 நாட்கள் மிகவும் விமர்சையாக நடைபெறும் தேரோட்டம் இன்று (ஏப்ரல் 20) கோலாகலமாக நடைபெற்றது. தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 18 நாட்கள் மிகவும் விமர்சையாக நடைபெறும் சித்திரை திருவிழா ஏப்ரல் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சாமி அலங்காரம் மற்றும் பல்லக்கில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 7 மணிக்கு ராஜவீதிகளில் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

Posted on: April 19, 2024 Posted by: Deepika Comments: 0

Cook with Comali Season 5 : 5 New Clowns

குக் வித் கோமாளி சீசன் 5: புதிதாக களம் இறங்கும் 5 கோமாளிகள் Cook with Comali Season 5 “குக் வித் கோமாளி” விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் ஜனவரி மாதமே துவங்கி இருக்க வேண்டிய நிகழ்ச்சி, குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடத்தி வந்த மீடியா மேசன்ஸ் என்ற நிறுவனம் திடீரென விலகியது. எனவே தான் இந்த 5-வது சீசன் தாமதமாகத் தொடங்கி இருக்கிறது. குக் வித் கோமாளி சீசன் 2 தான் இந்த சீசனில் இருந்து தான் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பெருக ஆரம்பித்தனர். இந்த…

Posted on: April 19, 2024 Posted by: Deepika Comments: 0

Parliamentary Elections in Tamil Nadu: 40.05 Percent Voter Turnout till 1 pm

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல்: பகல் 1 மணி வரை 40.05 சதவிகித வாக்குகள் பதிவு Parliamentary Elections in Tamil Nadu தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கிய நிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்குப்பதிவு ( Parliamentary Elections in Tamil Nadu) நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தமிழ்நாட்டில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 40.05 % வாக்குகள் பதிவாகியுள்ளது. தருமபுரி தொகுதியில் அதிக பட்சமாக 44.08…

Posted on: April 19, 2024 Posted by: Deepika Comments: 0

Must Perform Democratic Duty – Appeal of Chief Minister Who Voted in Chennai

ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும் – சென்னையில் வாக்களித்த முதல்வர் வேண்டுகோள் Must Perform Democratic Duty மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும் (Must Perform Democratic Duty) என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. முற்பகல் 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நான்…