Posted on: April 19, 2024 Posted by: Deepika Comments: 0

ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும் – சென்னையில் வாக்களித்த முதல்வர் வேண்டுகோள்

Must Perform Democratic Duty

மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும் (Must Perform Democratic Duty) என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Must Perform Democratic Duty

தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. முற்பகல் 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார். முதல்வர் ஸ்டாலின் X தளத்தில் நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன், அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, முதன் முறை வாக்களிக்கும் இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில் என்று பதிவிட்டுள்ளார்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment