Posted on: April 18, 2024 Posted by: Deepika Comments: 0

ஆகஸ்ட் முதல் வாரத்திலே கல்லூரிகள் திறப்பு: கால அட்டவணையை வெளியிட்டது யுஜிசி

Colleges Opening:

இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேரும் முதலாமாண்டு (Colleges Opening ) மாணவர்களுக்கு வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் தொடங்க வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

Colleges Opening in First Week of August

முதலாம் ஆண்டு மாணவர்கள்:

கல்வியாண்டுக்கான கால அட்டவணை யுஜிசி சார்பில் ஆண்டு தோறும் வெளியிடப்படுவதை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும் நாள், பருவத் தேர்வுகள் மற்றும் விடுமுறைகள் உட்பட அனைத்து அலுவல் விவகாரங்களையும் முடிவு செய்து செயல்படுகின்றன. இதன்மூலம் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்யவும், தரமான கற்பித்தல்-கற்றல் மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.

கல்வியாண்டுக்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டு அதன்படி ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தொழில் சாராத படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் வகுப்புகள் தொடங்க வேண்டும்.

2-ம் ஆண்டு மாணவர்கள்: Colleges Opening

2-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை மாதம் 3-வது வாரத்துக்குள் கல்லூரிகள் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தொழிற்சார்ந்த படிப்புகளில் 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஜூலை இறுதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்.

உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்வியாண்டு நாட்காட்டியை தயாரிக்க வேண்டும். அந்த நாட்காட்டி அடிப்படையில் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என யுஜிசி செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி தெரிவித்துள்ளார்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment