
மழைநீர் வடிகால் உள்கட்டமைப்பை மேம்படுத்த, மாநகராட்சி தனது 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், 65 வார்டுகளுக்கு தலா ₹50 லட்சம் பொது நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்துள்ளது. சமீபத்தில் பெய்த கோடை மழையை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறையினர் மாநகரம் முழுவதும் உள்ள மழைநீர் வடிகால், கால்வாய்கள் மற்றும் நீர்வழிப்பாதைகளை தூர்வாரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து...