Posted on: April 20, 2024 Posted by: Deepika Comments: 0

கோலாகலமாக நடைபெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா!

Tanjore’s

தஞ்சை (Tanjore’s) பெரிய கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 18 நாட்கள் மிகவும் விமர்சையாக நடைபெறும் தேரோட்டம் இன்று (ஏப்ரல் 20) கோலாகலமாக நடைபெற்றது.

Tanjore's

தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 18 நாட்கள் மிகவும் விமர்சையாக நடைபெறும் சித்திரை திருவிழா ஏப்ரல் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சாமி அலங்காரம் மற்றும் பல்லக்கில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 7 மணிக்கு ராஜவீதிகளில் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாய என்று விண்ணதிர கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து ஏப்ரல் 22-ஆம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. 23-ஆம் தேதியுடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது. தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment