Posted on: April 22, 2024 Posted by: Deepika Comments: 0

4 ஆண்டு இளங்கலை பட்டம் : பிஎச்.டி. படிப்பிற்கு அனுமதி – யு.ஜி.சி அறிவிப்பு

4 Year Bachelor Degree

கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர பிஎச்.டி. ஆய்வுப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நெட் – தேசிய தகுதி தேர்வு, செட் – மாநில தகுதி தேர்வு ஆகிய ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி. ஆய்வுப்படிப்பில் சேர முதுகலை பட்டம் அவசியம் என்ற நிலையில் 75 % மதிப்பெண்களுடன் 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், (4 Year Bachelor Degree) நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரலாம் என யுஜிசி தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

4 Year Bachelor Degree

“நெட்” தேர்வு எழுதுவதற்கும் குறைந்த பட்சம் 55 % மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு இந்த விதிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு தளர்த்தி உள்ளது. 4 ஆண்டு பட்டப்படிப்பில் அவர்கள் என்ன பாடம் படித்து இருந்தாலும், பிஎச்.டி. படிப்பில் தங்களுக்கு விருப்பமான பாடத்தை எடுக்க அனுமதிக்கப் படுவார்கள். SC, ST இதர பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினர் ஆகியோருக்கு 5 % மதிப்பெண் தளர்வு உண்டு என யுஜிசி தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment