Posted on: May 25, 2024 Posted by: Deepika Comments: 0

6-ம் கட்ட தேர்தல்: 58 தொகுதிகளில் தொடங்கிய  வாக்குப்பதிவு

Phase 6 Elections:

7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இதில் 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 6-வது கட்டமாக (Phase 6 Elections) 58 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Phase 6 Elections

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளும், அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளும், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 8 தொகுதிகளும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியும் அடங்கும்.நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும். மக்கள் காலையில் இருந்தே ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகிறார்கள்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment