Posted on: April 22, 2024 Posted by: Deepika Comments: 0

சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை – பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை

Special Classes

கோடை விடுமுறையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் ( Special Classes) நடத்தக்கூடாது, வகுப்புகள் நடத்துவதால் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுவதாக புகார் பெறப்பட்டுள்ளதை தொடர்ந்து பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

Special-Class

பள்ளிக்கல்வித் துறை அறிக்கை

முதலமைச்சர் தனிப்பிரிவில் 14417 – ல் பெறப்பட்ட புகார் மனுவில், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும் , இதனால் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் புகார் பெறப்பட்டதை  தொடர்ந்து அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்குமாறும் , மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவழைக்க அழுத்தம் தரக் கூடாது என்றும் பள்ளிக்கல்வி துறை தெரிவிக்கப்படுகிறது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment