Posted on: April 24, 2024 Posted by: Deepika Comments: 0

தமிழக பேருந்துகளில் தானியங்கி கதவுகள் குறித்த விவரங்கள் தாக்கல் செய்ய – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Automatic Doors in Tamil Nadu Buses

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது (Automatic Doors in Tamil Nadu Buses) என பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏப்ரல் 23 உத்தரவிட்டுள்ளது.

Automatic Doors in Tamil Nadu Buses

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கி தங்களது கால்களை தரையில் தேய்த்த படியும் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்கள் மற்றும் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

Automatic Doors in Tamil Nadu Buses

சென்னையில் ஓடும் பேருந்தில் பள்ளி மாணவன், ஜன்னல் கம்பியைப் பிடித்தபடி, ஸ்கேட்டிங் செய்த வீடியோ வெளியாகி வைரலானதை தொடர்ந்து, ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இளைஞர்களின் நலன் கருதி தமிழகத்தில் அரசு, தனியார் பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து பேருந்துகளிலும் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

கூடுதல் பேருந்துகள்

நீதிபதிகள்: கூடுதல் பேருந்துகள் பள்ளி தொடங்கும் நேரத்தில் இயக்கினாலும், இளைஞர்களின் படிக்கட்டு பயணமும் விபத்தும் குறையவில்லை. ஓட்டுநர்களும், நடத்துநர்களும் இளைஞர்களால் தாக்கப்படுகிறார்கள். இளைஞர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் நலன் கருதி தமிழகத்தில் பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து பேருந்துகளிலும் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் படிக்கட்டுகளில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டு உள்ளது? எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்படாமல் உள்ளது? என்பது குறித்து தமிழக உள்துறை செயலாளர், போக்குவரத்துத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment