Posted on: April 24, 2024 Posted by: Deepika Comments: 0

சென்னை சென்டிரல் – மேற்கு வங்காளம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்

Chennai Central Express Train Service Change

சென்னை சென்டிரல் (Chennai Central) -மேற்கு வங்காளம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் (Express Train Service Change) சேவை பராமரிப்பு பணி காரணமாக மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Express Train Service Change

பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்- மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி இடையே எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து நியூ ஜல்பைகுரிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-22611) இன்று (புதன்கிழமை) முதல் ஹிஜ்லி, கரக்பூர், பட்டா நகர் வழித்தடத்தில் செல்லும். அதேபோல, மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (22605) வருகிற 26-ந் தேதி முதல் 2 மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment