Posted on: April 25, 2024 Posted by: Deepika Comments: 0

இந்திய வம்சாவளி சார்ந்த சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளிப் பயணம்

Sunitha Williams

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் (Sunitha Williams) மூன்றாவது முறையாக வரும் மே 6-ஆம் தேதி இரவு 10.34 மணிக்கு விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டு சாதனை படைக்க உள்ளார் என நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunitha Williams

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் ராக்கெட்டில் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏறிச் சென்று, சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வார காலம் தங்குவார்கள் என்று நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வில்லியம்ஸின் சாதனை விவரம்

  • 1998 ஆம் ஆண்டு நாசாவால் விண்வெளி வீராங்கனையாக சுனிதா வில்லியம்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அவர் ஏற்கெனவே எக்ஸ்பெடிஷன்ஸ் 14/15 மற்றும் 32/33 என்ற 2 விண்வெளிப் பயணங்களில் அனுபவம் வாய்ந்தவர்.
  • எக்ஸ்பெடிஷன் 14 குழுவின் விமானப் பொறியாளராக வில்லியம்ஸ் பணியாற்றினார். எக்ஸ்பெடிஷன் 14/15 விண்வெளி பயணமானது டிசம்பர் 9, 2006 முதல் ஜூன் 22, 2007 வரை நீடித்தது.
  • வில்லியம்ஸ் எக்ஸ்பெடிஷன் 32க்கான விமானப் பொறியாளராகவும், எக்ஸ்பெடிஷன் 33க்கான சர்வதேச விண்வெளி நிலையத் தளபதியாகவும் நீண்ட காலப் பணியின் ஒரு பகுதியாகவும் இருந்தார்.
  • வில்லியம்ஸ் நான்கு மாதங்கள் சுற்றுப்பாதை ஆய்வகத்தில் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டார்.
  • 127 நாட்கள் விண்வெளியில் கழித்த அவர் நவம்பர் 18, 2012 அன்று கஜகஸ்தானில் தரையிறங்கினார்.
  • இதுவரை மொத்தம் நான்கு விண்வெளி பயணங்களில் 321 நாட்கள் சுனிதா விண்ணில் இருந்துள்ளார்.
  • மொத்தம் 50 மணி நேரம் மற்றும் 40 நிமிடங்களுடன் அதிக விண்வெளிப் பயணம் மேற்கொண்ட வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
  • அவரது சாதனையை 10 விண்வெளிப் பயணங்களை மேற்கொண்ட விட்சன் முறியடித்துள்ளார். அவர் இதுவரை மொத்தம் 60 மணி 21 நிமிடங்கள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
  • மூன்றாவது முறையாக விண்வெளி பயணம் மேற்கொள்ளும் சுனிதா வில்லியம்ஸ் விட்சனின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment