முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
Early Onset of Southwest Monsoon
தென்மேற்கு பருவமழை இந்த வருகிற 19-ந்தேதி தெற்கு அந்தமான் கடல், வங்காள விரிகுடாவின் சில பகுதிகள் மற்றும் நிக்கோ பார் தீவுகளில் பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (Early Onset of Southwest Monsoon) தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்க வாய்ப்பு உள்ளது. வருகிற 19-ந்தேதி தெற்கு அந்தமான் கடல், வங்காள விரிகுடாவின் சில பகுதிகள் மற்றும் நிக்கோ பார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. அதனை தொடர்ந்து தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சரியான நேரத்தில் பருவமழை தொடங்கும். ஜூன் 1-ந்தேதி கேரளா பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி விடும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.தென்மேற்கு பருவமழையின் போது கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.