Posted on: May 24, 2021 Posted by: Brindha Comments: 0

தமிழக அரசின் உத்தரவுப்படி அமல்படுத்தப்பட்ட தளர்வுகளற்ற முழு முடக்கத்தால் திருச்சி மாவட்டம் முழுவதும் முற்றிலும் முடங்கியது.கொரோனா பரவலைத் தடுக்க மே 24 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை ஒரு வாரம் முழு முடக்கம் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணி முதல் இந்த உத்தரவு அமலாகியுள்ளது.

இதன் காரணமாக திருச்சி மாநகரம், உறையூர், திருவானைக்காவல் , சமயபுரம், திருவரங்கம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், உப்பிலியபுரம், முசிறி, துறையூர், தா.பேட்டை, மருங்காபுரி என மாவட்டம் முழுவதும் முழுமையாக சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்படவில்லை.

பெட்ரோல் விற்பனை நிலையங்களும், மருத்துவமனை, மருந்தகங்கள் மட்டும் இயங்கின. பேருந்து, ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இயக்கப்படவில்லை.

மாநகரின் அடையாளமான மலைக்கோட்டை, காவிரி பாலம், கொள்ளிடம் பாலம் மற்றும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. மக்கள் நடமாட்டமும் இல்லை. ஒரு சில இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்வதை காணமுடிந்தது.தேநீரகங்கள் மற்றும் உணவகங்களும் திறக்கப்படவில்லை. அம்மா உணவகங்கள் மட்டுமே வழக்கம்போல இயங்கின. திங்கள்கிழமை அதிகாலை 4 மணி முதல் தொடங்கி உள்ள இந்த முழு முடக்கம் வரும் 31ஆம் தேதி வரை அமலில் உள்ளது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment