Posted on: April 23, 2024 Posted by: Deepika Comments: 0

தமிழகத்தில் சூரிய வீடு திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Suryakar Mufti Bijili Yojana

பிரதமரின் சூரியவீடு இலவச மின்சாரம் (Suryakar Mufti Bijili Yojana) என்ற திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச சூரியசக்தி மின்சாரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. ரூ.75 ஆயிரம் கோடியில் இத்திட்டம் செயல்படுத்தும் நிலையில் தமிழகத்தில் இத்திட்டத் திற்க்காக 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Suryakar Mufti Bijili Yojana

தமிழகத்தில் சூரியசக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்ற பசுமை எரிசக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்ய மாநில அரசுகளை, மத்தியஅரசு ஊக்கப்படுத்தி வருகிறது.இத்திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின்கீழ், அடுத்த ஓராண்டுக்குள் 25 லட்சம் வீடுகளுக்கு சூரியசக்தி மின்இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், இதில் 5 % பேருக்கு மட்டுமே சூரியசக்தி மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

சூரியசக்தி மின் உற்பத்திக்கான சோலார் தகடுகள் (பேனல்) விற்பனை செய்யும் 100-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் சென்னை, கோவையில் மட்டுமே உள்ளனர். இதனால், பிற மாவட்டங்களில் இணைப்பு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் சோலார் தகடு விற்பனை செய்யும் விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment