ஆபத்தான உணவு பொருளை விற்க கூடாது: உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்
Dangerous Food Product
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் உணவு பொருட்களை குழந்தைகளுக்கு விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்பு துறை (Dangerous Food Product) அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் தாவணகெரேவில் ‘ஸ்மோக் பிஸ்கட்’ சாப்பிட்ட சிறுவன், கடுமையான வலியில் துடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ‘ஸ்மோக்’ உணவு வகைகளை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம். அவை உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘திரவ நைட்ரஜன்’ மூலமாக தயாரிக்கப்படும், ஸ்மோக் வகை உணவுகள் சுவாசப்பாதை, உணவுப்பாதையை உறைய வைத்துவிடும். கண் பார்வை பாதிப்பு, பேசும் திறன் பாதிப்பு ஏற்படுத்தும். எனவே, திரவ நைட்ரஜன்களை உணவு பொருட்களோடு உட்கொள்ள கூடாது. தமிழகத்தில், திரவ நைட்ரஜன் பயன்படுத்தி பிஸ்கட், பீடா, ஐஸ்கிரீம் போன்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யும், ஹோட்டல்கள், பார்கள் உள்ளிட்டவை கணக்கெடுக்கும் பணி தொடங்கப் பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது 10 ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. அதனால், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் உணவு பொருட்கள் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் என கூறினர்.