வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழகத்தில் பாதுகாப்பு தீவிரம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
West Nile Fever
கேரளா மாநிலத்தில் பரவி வரும் வெஸ்ட் நைல் காய்ச்சலால் (West Nile Fever) தமிழகம் வருபவர்களைக் கண்காணித்து வருவதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
வெஸ்ட் நைல் காய்ச்சல் கேரளாவில் பரவி வருவதால், அங்கிருந்து தமிழகம் வருபவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். கொசுக்களில் இருந்து பரவக்கூடிய இந்த நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு, நாம் வசிக்கும் வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, வீடுகளை ஒட்டி தேவையற்று தேங்கிக்கிடக்கும் தண்ணீரை அப்புறப்படுத்துவது ஆகியவற்றை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு 13 வழிகளின் வழியே, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் வருவதற்கான வழிகள உள்ளன. அந்தப் பகுதிகளில் எல்லாம் சுகாதாரத்துறை மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.