“அண்ணா அறிவியல் கோளரங்கம்” புதிய வடிவில் நவீன வசதிகளுடன் திறந்து வைத்தார், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்
(Anna Science Planetarium)
திருச்சியின் அடையாளமான அண்ணா அறிவியல் மையத்தில் (“Anna Science Planetarium” in Trichy) புதிதாக நவீன வசதிகளுடன் கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோளரங்கத்தின் மூலம் வானில் நடக்கும் நிகழ்வுகளை துல்லியமாக காணும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இன்றைய அறிவியல் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் 4k முறையில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
Address: புதுக்கோட்டை, விமான நிலையம் அருகில், லூர்து நகர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு 620007
Phone number: 04312332190
Hours: Monday – Sunday 10 am–5:45 pm
அண்ணா அறிவியல் கோளரங்கம்
- திருச்சி விமான நிலையத்தின் அருகில் அறிவியல் மையம் உள்ளது. இந்த அறிவியல் மையத்தியல் வானியல் குறித்த அறிவியல் காட்சிகளை நேரில் காணலாம்.
- இதன்மூலம் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் வானியல் தொடர்பான ஆராய்ச்சியாளர்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர்.
தமிழக அரசு (Anna Science Planetarium)
- இந்த அறிவியல் மையத்தை 3 கோடி செலவில் மேம்படுத்த தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
- இந்நிலையில் பணிகள் நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் இந்த கோளரங்கத்தை தமிழக முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
4 கே தொழில்நுட்பம் (Anna Science Planetarium)
இந்த மேம்படுத்தப்பட்டுள்ள கோளரங்கத்தில் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வானில் நடக்கும் நிகழ்வுகளை துல்லியமாக 4k தொழில் நுட்பத்தில் கண்டு களிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கோளரங்க உள்சுவற்றில் லேசர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4k வசதியுடன் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 5.1 வசதியில் கேட்கும் ஆடியோ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
பள்ளி,கல்லூரி மாணவர்கள்
இதன் மூலம் நாம் வானில் மிதப்பது போலவே தோன்றும் வகையில் இந்த நவீன கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன கோளரங்கம் வானில் நடப்பதை துல்லியமாக காட்டக்கூடிய வல்லமை படைத்தது. இந்த கோளரங்கத்தை மக்கள் அனைவரும் நிச்சயமாக பார்க்க வேண்டும். அதிலும் முக்கியமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், குழந்தைகள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
திட்ட இயக்குனர் (Anna Science Planetarium)
இந்நிலையில் கோளரங்கத்தின் திட்ட இயக்குனர் அகிலன் கூறுகையில், திருச்சியில் செயல்பட்டு வரும் அண்ணா அறிவியல் மைய கோளரங்கம் 3 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் பல நவீன தொழில்நுட்பங்களை கொண்டு புது புதுப்பிக்கப்பட்ட கோளரங்கத்தை மக்கள் அனைவரும் கண்டு ரசிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.