Posted on: June 14, 2024 Posted by: Brindha Comments: 0

தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

Tamil Puthalvan Scheme

தமிழ்ப்புதல்வன் மூலமாக மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குகின்ற தமிழ்ப்புதல்வன் திட்டம் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெருவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tamil Puthalvan Scheme

 

பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசியபோது தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்த 43 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். வகுப்பறையை குழந்தைகளுக்கு பிடித்தபடி வண்ணமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் உலகளவில் சவால் விடும் வகையில் வளர வேண்டும் என்பதே என் ஆசை. உங்களுக்கான திட்டங்களை நான் பார்த்துக்கொள்கிறேன். மாணவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். எங்கும் தேங்கி நிற்காமல் முன்னோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நீட் போன்ற மோசடி தேர்வுகளை எதிர்க்கிறோம். அதற்கு ஒருநாள் முடிவு கட்டுவோம். நீட் தேர்வு மோசடி என முதன் முதலில் கூறியது தமிழ்நாடுதான். தற்போது இந்தியாவே அதை கூறுகிறது. கல்வி, சமூகம், பொருளாதாரம், அரசியல் சூழல் என எந்த தடையும் இருக்க கூடாது. மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000- வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என  பேசினார்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment