Posted on: May 31, 2024 Posted by: Brindha Comments: 0

வாக்கு எண்ணிக்கை ஏற்பாடு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை

Tamil Nadu Chief Electoral Officer

நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வரும் ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ளதை தொடர்ந்து ஜூன் 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதால் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Tamil Nadu Chief Electoral Officer

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, 39 மையங்களில் உள்ள 43 கட்டிடங்களில் நடைபெற உள்ளது. மொத்தம் 234 அறைகளில் நடைபெறக்கூடிய இந்த வாக்கு எண்ணிக்கை பணிக்காக ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும். வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக வீடியோ பதிவு டைபெறும். தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை பணிகளில் நுண்பார்வையாளர்கள், தேர்தல் அலுவலர்கள் உள்பட 38 ஆயிரத்து 500 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பிறகு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment