Posted on: June 5, 2024 Posted by: Brindha Comments: 0

பள்ளியிலேயே வங்கி கணக்கு தொடங்கும் திட்டம்: வழிகாட்டுதல் வெளியிட்ட  பள்ளி கல்வித்துறை

School Bank Account Opening

படிக்கும் பள்ளியிலேயே மாணவர்கள் அவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்குதல், வங்கிக்கணக்குடன் ஆதார் இணைத்தலுக்கான வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

School Bank Account Opening

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அப்பள்ளியிலேயே வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு பதிவு செய்தல், வங்கிக் கணக்குடன் ஆதார்எண் இணைத்தல் போன்றவற்றை மேற்கொள்ள பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி, தனியார் பள்ளி இயக்குநரகம் அறிவுறுத்தி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

வழிகாட்டு நெறிமுறைகள்

  • தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் வரும் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் இடை நிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக தவி ற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
  • இந்த தொகை உரிய மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் நேரடியாக வழங்கப்படுவதை உறுதி செய்ய, வங்கிக் கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு அவசியமாகும்.
  • எனவே பள்ளிகளிலேயே வங்கிக் கணக்கு தொடங்க வயது அடிப்படையில் 2 நிலைகளில் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
  • குறிப்பாக, 5 முதல் 10 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயரில் இணைக் கணக்காக தொடங்கப்படும்.
  • மாணவர், பெற்றோர் இணைந்து இந்த கணக்கை பராமரிக்க முடியும். ஆரம்பத் தொகை ஏதுமில்லாத கணக்காக இருக்கும்.
  • கணக்குடன், பெற்றோர் ஆதாரை இணைக்க முடியாது என்பதால், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் அவசியமாகும்.
  • அதன் அடிப்படையில் மட்டுமே வங்கிக் கணக்கு தொடங்கப்படும்.
  • எனவே, குழந்தைகளுக்கான முழு விவரங்களும் பெறப்பட வேண்டும்.
  • பத்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புதிய கணக்கு பொறுத்தவரை, ஆதார் நகல், மாணவரின் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் வேண்டும்.
  • ஆதார் பதிவு விவரங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குதல், ஆதார் புதுப்பித்தலை உறுதிசெய்ய வேண்டும்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment