செயல்படாத வங்கி கணக்குகளுக்கு அபராத தொகை வசூலிக்க RBI தடை
RBI:
வங்கிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல், எந்தவொரு பரிவர்த்தனையும் இல்லாத வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என வங்கிகள் கட்டணம் விதிக்கக்கூடாது‘ என இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்ற நிலையில் அனைத்து வங்கி கணக்குகளிலுமே அனைவராலும் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க முடியாது. ஆனால் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காத கணக்குகளுக்கு வங்கிகள் குறிப்பிட்ட தொகையை அபராதத் தொகையாக விதிக்கும். தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எந்தவொரு பரிவர்த்தனைகளும் நடக்காத வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையென அபராதத் தொகை வசூலிக்கக்கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறிய பின்னரும் மீறி பல வங்கிகள் இன்னமும் மினிமம் பேலன்ஸ் இல்லையென அபராதத் தொகையை விதித்து தான் வருன்றன.
வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத வங்கி கணக்கை மூட செல்லும் போது, பல வங்கிகள் அபராதத் தொகையை கட்டினால் தான் கணக்கை மூட முடியும் என்று கூறுகின்றன. இதனால் வாடிக்கையாளர்களும் வேறு வழியில்லாமல் அபாரதத் தொகையை கட்டிவருகின்றனர். ஒருவேளை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எந்தவொரு பரிவர்த்தனையும் நடக்காத வங்கி கணக்கிற்கு உங்களிடம் அபாரதத் தொகை கேட்டால், bankingombudsman.rbi.org.in என்ற இணையதளத்தில் புகாரளிக்கலாம் என இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.