Posted on: April 16, 2024 Posted by: Brindha Comments: 0

களப்பணியாளர்களுக்கு கோடை வெயிலின் தாக்கம் குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு

Public Health Department

தமிழகத்தில் கோடை வெளியிலின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை காலை 11 மணிக்குள் முடிக்க அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை (Public Health Department) இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

Public Health Department

அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் :

  • தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலாளருடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
  • அதில் சுகாதாரத்துறை தொடர்பாக சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருந்துகளை சேமித்து வைத்திருக்கும் குளிர் பதனக் கிடங்குகள், மருந்தகங்கள், சேமிப்பு கிடங்குகளில் உரிய காற்றோட்ட வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • அறையின் சுவர்களை ஒட்டி மருந்துகளை வைக்காமல், அதில் இருந்து சற்று தள்ளி வைத்திருக்க வேண்டும்.
  • அப்போதுதான் வெப்பத்தில் இருந்து மருந்துகளை பாதுகாக்க முடியும்.
  • சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வழக்கமான நேரத்தைக் காட்டிலும் முன்னதாகவே தொடங்கி காலை 11 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும்.
  • வெப்ப அலையால் தடுப்பூசியின் வீரியம் குறையாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும். இந்த கோடையில் அதுதான் பொதுமக்கள், சுகாதாரத்துறை களப்பணியாளர் களுக்கும் சிறந்த நேரமாக இருக்கும் என தெரிவித்தார்.
Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment