Posted on: May 20, 2024 Posted by: Deepika Comments: 0

மே 23 வரை நீலகிரி, கோவை, நெல்லை, குமரிக்கு ஆரஞ்ச் அலர்ட்

Orange Alert

நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் வரும் மே 23-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்பதால், மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Orange Alert

தமிழக மக்கள் தொடர்புத் துறை வரும் 23-ம் தேதி வரை 4 நாட்களுக்கு நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், அதற்கான ஆரஞ்ச் அலர்ட் வெளியிட்டதையடுத்து, இந்த மாவட்டங்களில் 296 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர். பேரிடர் மேலாண்மை துறை மூலமாக 2.66 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மேலாண்மையை 1070 என்ற உதவி எண் மூலமும், மாவட்ட பேரிடர் மேலாண்மையை 1077 என்ற எண் மூலமும் தொடர்பு கொள்ளலாம். கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment