நீட் தேர்வு: நாமக்கல் கிரீன் பார்க் மாணவர்கள் 4 பேர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை
NEET Exam:
நாமக்கல் கிரீன்பார்க் பயிற்சி மையத்தை சேர்ந்த 4 மாணவர்கள் நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு, இந்தியா முழுவதும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் கடந்த மே மாதம் 5ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் 10 நாட்கள் முன்பாக நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.
கிரீன்பார்க் நீட் பயிற்சி மையம்
- நாமக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வை 11 மையங்களில் 6,180 மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.
- நாமக்கல், கிரீன்பார்க் நீட் பயிற்சி மையத்தில் படித்து தேர்வு எழுதிய மாணவர்கள் ரஜனீஷ், ரோஹித், சபரீசன், ஜெயதி பூர்வஜா ஆகிய 4 பேர் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
- பயிற்சி மைய மாணவர்கள் நித்தீஷ், ரித்திக்சரன், விக்னேஷ் ஆகிய 3 பேர் 720க்கு 715 மதிப்பெண்கள் பெற்று பயிற்சி மையத்தில் 2ஆம் இடம் பெற்றுள்ளனர்.
- ஹித்தேஷ் மோகன், மிதுன்ராஜ், பவன்குமார், சங்கமிதுன் ஆகிய 4 மாணவர்கள் 720க்கு 710 மதிப்பெண்கள் பெற்று பயிற்சி மையத்தில் 3ஆம் இடம் பெற்றுள்ளனர்.
- கிரீன் பார்க் கோச்சிங் சென்டரில் படித்து தேர்வு எழுதிய 49 மாணவர்கள் 720க்கு 700 மதிப்பெண்களுக்கு அதிகமாக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
- அதிக மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை கிரீன் பார்க் கோச்சிங் சென்டரின் சேர்மன் சரவணன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
- மேலும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகளும் மாணவ, மாணவிகளை பாராட்டினார்கள்.
Click to rate this post!
[Total: 0 Average: 0]