Posted on: May 30, 2024 Posted by: Brindha Comments: 0

ஜூன் 4: 57  கண்காணிப்பு  பார்வையாளர்கள் நியமனம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

June 4:

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறு வருகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 39 தொகுதிகளுக்கு 57 பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

June 4

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.  தமிழகத்தில் முதல் கட்டமாக 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் முடிவுற்ற  நிலையில் ஜூன் 1-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதை அடுத்து, வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் ஜூன் 4-ம் தேதி நடைபெறும் நிலையில், தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் 57 தேர்தல் பொது பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை தொகுதிகளுக்கு தலா 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளதால் கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் மூன்று பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment