Posted on: June 9, 2024 Posted by: Brindha Comments: 0

ஜூன் 10: பள்ளி திறப்பு நாள் அன்றே நலத்திட்டங்கள் வழங்க பள்ளி கல்வி துறை உத்தரவு

June 10:

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்த நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் திறப்பு ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு முதல் நாளான அன்றே நலத்திட்டங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

June 10

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (ஜூன் 10) திறக்கப்பட உள்ளன. இதற்கான வளாகப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட வேண்டிய இனிப்பு பொங்கலை, பள்ளி தொடங்கப்படும் முதல் நாளான நாளை அனைத்து பள்ளிகளிலும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு சமூக நலத்துறை ஆணையர் வே.அமுதவல்லி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே வரும் கல்வியாண்டுக்கான (2024-25) நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment