Posted on: May 30, 2024 Posted by: Deepika Comments: 0

சென்னை அனல்மின் நிலைய மின் உற்பத்திக்கு இந்தோனேசியா நிலக்கரி இறக்குமதி

Indonesia

வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 3-ல் மின்னுற்பத்தி செய்ய இந்தோனேசியாவில் (Indonesia) இருந்து 13 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய மின்வாரியம் திட்டமிட்டு இதற்காக, வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் டெண்டர் விடப்படுகிறது என மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

Indonesia

வடசென்னை அனல்மின் நிலையம்

தமிழ்நாடு மின்வாரியம் ரூ.10,158 கோடி செலவில் வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 3 என்ற புதிய அனல் மின்னுற்பத்தி நிலையத்தை கடந்த மார்ச் மாதம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார். 800 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த மின்னுற்பத்தி  நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

மின்வாரியத்துக்கு சொந்தமான அனல்மின் நிலையங்களுக்கு ஆண்டொன்றுக்கு 223.4 லட்சம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இந்த நிலக்கரி மகாநதி, சிங்கரேணி ஆகிய நிலக்கரி சுரங்கங்களில் இருந்தும் ெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 3-ல் மின்னுற்பத்தி செய்வதற்காக நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு மின்நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் ரக நிலக்கரியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு இந்தோனேசியா நாட்டில் இருந்து 13 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட உள்ளது. இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது. ஆண்டுதோறும் 6 சதவீத நிலக்கரியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதனடிப்படையில், இந்த அனுமதி பெறப் பட்டுள்ளது. நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் டெண்டர் விடப்படும். மேலும், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை சேமித்து வைக்க கிடங்கு வசதியும் ஏற்படுத்தப்படும்  என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment