நிலவின் பள்ளங்களில் பனிக்கட்டிகள் – இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
Ice in Craters of Moon
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்த சந்திரயான்-3 விண்கலத்தை ஜூலை 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டு ஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரிய தகவல்களையும், படங்களையும் அனுப்பிய நிலையில் நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் (Ice in Craters of Moon ) உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தரையிறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை தயாரித்தது. விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னர் விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் பாகம் ஆகஸ்ட் 23-ம்தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அதிலிருந்து ரோவர் வாகனமும் பத்திரமாக நிலவின் தரைப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு எனும் பெருமையை இந்தியா பெற்றது. அதன் பின் லேண்டர் தரை இறங்கிய இடத்தில் இருந்த படியும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் 14 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரிய தகவல்களையும், படங்களையும் அனுப்பியது.
இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு விவரம்:
- இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் இணைந்து ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம்,
- ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மற்றும் ஐஐடி (ஐஎஸ்எம்) தன்பாத் ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு செய்து வந்தனர்.
- நிலவின் துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
- நிலவில் முதல் இரண்டு மீட்டர்களில் உள்ள பனியின் அளவு இரு துருவங்களின் மேற்பரப்பில் உள்ளதை விட 5 முதல் 8 மடங்கு பெரியதாகும்.
- சந்திரனில் துளையிட்டு அவற்றின் மாதிரியை ஆய்வு செய்ய வேண்டும்.
- எதிர்கால நிலவு பயணங்களுக்கு உதவியாக அமையும்.
- வட துருவப் பகுதியில் உள்ள நீர் பனியின் அளவு, தென் துருவப் பகுதியை விட 2 மடங்கு அதிகம் என கூறப்பட்டுள்ளது.