Posted on: April 12, 2024 Posted by: Thilagavathi Comments: 0

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் சரிபார்ப்பது எப்படி? சரியான வழிகாட்டுதல் நடைமுறைகள் இதோ !!

Check your Name in Voter List

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் 2024 ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பொது மக்கள் ஓட்டு போட வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்வது அவசியம். அதை ஆன்லைன் மூலமாக எளிதாக (Check your Name in Voter List) தெரிந்துக் கொள்ளலாம்.

Check your Name in Voter List

ஆன்லைனில் பெயரை சரி பார்ப்பது எப்படி? (How to check name online?)

  • பொதுமக்கள் தேர்தலில் ஜனநாயக கடமையை ஆற்ற, 1 ஏப்ரல் 2024 அன்று 18 வயதை அடைந்திருக்க வேண்டும்.
  • https://www.eci.gov.in/  என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
  • இணையதள பக்கத்தை ஸ்க்ரால் செய்து கீழே வந்தால் இடது புறத்தில் Electors என்ற பகுதியின் கீழ் 4ஆவது ஆப்ஷனாக search name in voter list இருக்கும்.
  • கிளிக் செய்தால் EPIC தகவல் கேட்கும். அதில், வாக்காளர் அடையாள எண்ணை (EPIC Number) பதிவிட்டு, எந்த மாநிலம் என்பதை பதிவிடவும்.
  • கீழே இருக்கும் கேப்ட்சாவை பதிவிட்டு, search பட்டனை Click செய்து  , உங்களது பெயர், எந்த தொகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஸ்க்ரீனில் தோன்றும்.
  • EPIC Number இல்லை என்றால் உங்களுடைய தனிப்பட்ட தரவுகள் மற்றும் மொபைல் எண் வாயிலாகவும் விவரங்களைத் தெரிந்துக் கொள்ளலாம்.
  • தனிப்பட்ட விவரங்களை பதிவிடும் போது பிறந்த தேதி, மாவட்டம், சட்டமன்றம் மற்றும் உறவினரின் பெயர் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
  • Mobile எண்ணை குறிப்பிடும் போது, உங்கள் Mobile எண்ணுக்கு OTP வரும், அந்த OTP யை பதிவிட்டால் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை தெரிந்துக் கொள்ளாம்.

Election-commission-of-india

EPIC எண்ணைப் பயன்படுத்தி தங்கள் வாக்காளர் ஐடியின் டிஜிட்டல் பதிப்பையும் பதிவிறக்கம் செய்வது எப்படி? (How to Download Digital Version of their Voter ID Using EPIC Number?)

  • இணையதள பக்கத்தில் மூன்றாவதாக உள்ள Download Voter ID (E-EPIC) என்பதை Click செய்யவும்
  • புதிதாக ஓபனாகும் பக்கத்தில் உங்கள் Mobile எண் மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி உள்நுழையவும்.
  • உள்நுழைந்ததும் Mobile எண்ணுக்கு வரும் OTP ஐ இட வேண்டும்.
  • உங்கள் வாக்காளர் அட்டையை Download செய்து கொள்ளலாம்.

இந்திய தேர்தல் அட்டை இல்லாத பொது வாக்களிக்க எடுத்து செல்லும் பிற சான்றிதழ்கள் (Other Certificates to Carry General Vote Without Indian Election Card)

  • வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ள நிலையில் வாக்காளர் அட்டை இல்லை என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பிற அடையாள அட்டைகளை பயன்படுத்தியும் வாக்களிக்கலாம்.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை
  • புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது தபால் அலுவலக பாஸ்புக்
  • தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு
  • புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது தபால் அலுவலக பாஸ்புக்
  • ஓட்டுனர் உரிமம்
  • ஆதார் அட்டை
  • பான் கார்டு
  • RGI (Registrar General of India) வழங்கிய ஸ்மார்ட் கார்டு
  • பாஸ்போர்ட்
  • புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
  • மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள்  பயன்படுத்தியும் வாக்களிக்கலாம்.
Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment