தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மே 14 வரை கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
Heavy Rain
கோயம்புத்தூர், நீலகிரி, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று முதல் மே 14-ஆம் தேதி வரை கனமழைக்கு (Heavy Rain) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக உள் மாவட்டங்கள்
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக அதிகமாகவும் வெப்ப நிலை இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக பட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. அதிக பட்ச வெப்ப நிலை கரூர் பரமத்தியில் 41.5° செல்சியஸ் (+5.2° செல்சியஸ் இயல்பை விட அதிகம்) பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34° – 37° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22° –29° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 36.6° செல்சியஸ் (-1.0° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.6° செல்சியஸ் (-0.8° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.