அரசு ஆசிரியர்களை அலுவலகப் பணிக்கு பயன்படுத்தக் கூடாது – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
Govt Teachers
தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளிக் கல்வித்துறை அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை (Govt Teachers) அலுவலகப் பணிக்கு பயன் படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை
முதுநிலை ஆசிரியர்களின் பணபலன் சார்ந்த தேர்வுநிலை, சிறப்புநிலை கருத்துரு தயாரித்தல் மற்றும் அதுசார்ந்த அமைச்சுப்பணிகளை அந்த ஆசிரியரே தயாரித்துக் கொடுத்தால் மட்டுமே பெற்றுத் தரப்படுகிறது. ஆசிரியர்கள் செய்யவில்லை எனில், அவரது விண்ணப்பம் கிடப்பில் போடப் படுகிறது. இந்த மன உளைச்சலைத் தவிர்க்கும் பொருட்டு ஆசிரியர்களை கூடுதல் பணியாக அமைச்சுப் பணிகளையும் மேற்கொண்டு தங்களுக்குரிய பணபலன்களை பெறும் அவலநிலை உள்ளது. இதை நிவர்த்தி செய்யும் வகையில் உரிய நடவடக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டிருந்த நிலையில், ஆசிரியர்களை வேறு வேலைகளுக்கு பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.