Posted on: May 24, 2024 Posted by: Deepika Comments: 0

டிரைவிங் லைசன்ஸ்: புதிய விதிகளை அமல்படுத்திய மத்திய அரசு

Driving Licenses

மத்திய அரசு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகளை தற்போது  மாற்றியுள்ளது. பொதுவாக நாம் ஓட்டுநர் உரிமம்  (Driving Licenses) வாங்க வேண்டும் என்றால் RTO அலுவலகத்திற்கு சென்று ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டும்என்ற நடைமுறைக்கு மாறாகவே வேறு ஒரு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த புதிய விதி ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Driving Licenses

விண்ணப்பிக்கும் முறை:

  • https://parivahan.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்.
  • முகப்புப் பக்கத்தில் உள்ள டிரைவிங் லைசென்ஸ் அப்ளை ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்புங்கள்.
  • படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைப் பதிவேற்றவும்.
  • ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்ப செயல்முறையை முடித்த பிறகு, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும், உங்கள் ஓட்டுநர் திறமைக்கான ஆதாரத்தை வழங்குவதற்கும் ஆர்டிஓ அலுவலகத்தை அணுகவும்.
  • விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்த பின், உங்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.

லைசன்ஸ் கட்டணம் : License Fee

  • கற்றல் உரிமம் (LLR) : ரூ 200
  • கற்றல் உரிமம் புதுப்பித்தல் (LLR Renewal)- ரூ 200
  • சர்வதேச உரிமம்: ரூ 1000
  • நிரந்தர உரிமம்: ரூ 200.

தனியார் பயிற்சி மையங்களுக்கான விதிகள்:

  • ஓட்டுநர் பயிற்சி உரிமம் வழங்குவதற்கான தனியார் ஒட்டுநர் பயிற்சி மையத்திற்கு குறைந்தபட்சம் 1 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.
  • 4 சக்கர வாகனங்களுக்கு, ஒட்டுநர் மையத்தில் கூடுதலாக 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டியது அவசியம்.
  • தனியார் ஒட்டுநர் பயிற்சி மையத்தில் உரிய சோதனை வசதிகள் இருக்க வேண்டும்.
  • பயிற்சியாளர்கள் குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளி அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
  • பயிற்சியாளர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் ஒட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • பயோமெட்ரிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளின் அடிப்படைகளை பயிற்சியாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: Training period

  • லைட் வெயிட் வாகனப் பயிற்சியை 4 வாரங்களில் (குறைந்தபட்சம் 29 மணிநேரம்) முடிக்க வேண்டும்.
  • தியரி மற்றும் பிராக்டிகல் என இரண்டு வகையாக கற்பிக்க வேண்டியது அவசியம்.
  • தியரி பிரிவு 8 மணி நேரமும், நடைமுறை 21 மணி நேரமும் இருக்க வேண்டும்.
  • கனரக மோட்டார் வாகனங்களுக்கு, 38 மணிநேர பயிற்சி இருக்கும்.
  • இதில் 8 மணிநேர கோட்பாட்டு கல்வி மற்றும் 31 மணிநேர நடைமுறை தயாரிப்பு ஆகியவை அடங்கும்.
  • பயிற்சி 6 வாரங்களுக்குள் முடிக்கப்படும்.
  • ஜூன் 1ஆம் தேதியிலிருந்து ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்திற்கு போகாமல் தனியார் பயிற்சி மையங்களில் ஓட்டுனர் உரிமம் பெற முடியும்.
Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment