
சென்னை: 100, 101-வது வார்டு குடிநீர் வாரியத்தின் பணிமனைகள் இடமாற்றம்
Drinking Water Board
சென்னை குடிநீர் வாரியத்தின் அண்ணா நகர் மண்டலத்துக்கு உட்பட்ட 100 மற்றும் 101-வது வார்டு பணிமனை அலுவலகங்கள் 10-ம் தேதி முதல் புதிய முகவரியில் இயங்க உள்ளன என சென்னை குடிநீர் வாரியம் (Drinking Water Board) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.
100-வது பணிமனை
கீழ்ப்பாக்கம் பிரான்சன் கார்டனில் இயங்கிவந்த 100-வது பணிமனை, கதவு எண். 4, கோவில் தெரு, கீழ்ப்பாக்கம் என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
101-வதுவார்டு பணிமனை
கதவு எண்.4, கோவில் தெரு, கீழ்ப்பாக்கம் என்ற முகவரியில் இயங்கி வந்த 101-வதுவார்டு பணிமனை, புதிய ஆவடி சாலையில், கீழ்ப்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையம் எதிரில் மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்கள் மற்றும் குடிநீர் வரி, கட்டணம் செலுத்த மேற்கண்ட புதிய முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கள்ளப்படுகிறது. மேலும், பகுதி பொறியாளர் (8144930908), துணை பகுதிப் பொறியாளர்கள் (8144930222, 8144930223) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.