District Agricultural Exhibition Festival in Trichy on 27 to 29 July 2023
திருச்சியில் மாநில வேளாண் கண்காட்சி திருவிழா ஜூலை 27 முதல் 29 வரை விவசாயிகளுக்கு அரசு அழைப்பு திருச்சியில் வரும் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை மாநில வேளாண்மை கண்காட்சி திருவிழா நடைபெறும் என்று வேளாண்மை துறை அறிவித்துள்ளது. வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது மாநில வேளாண் கண்காட்சி திருச்சியிலும், உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள், வாழை மலர்களுக்கான கண்காட்சி சென்னையிலும், பலாவுக்கான கண்காட்சி பண்ருட்டியிலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில்நடைபெற்றது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு தேவைப்படும் விதைகள்,…