Public Health Department Important Notice on Summer Heat Exposure for Field Workers
களப்பணியாளர்களுக்கு கோடை வெயிலின் தாக்கம் குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு Public Health Department தமிழகத்தில் கோடை வெளியிலின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை காலை 11 மணிக்குள் முடிக்க அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை (Public Health Department) இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் : தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலாளருடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சுகாதாரத்துறை தொடர்பாக சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.…