Posted on: May 27, 2024 Posted by: Brindha Comments: 0

மே.29 முதல் வாக்கு எண்ணுபவர்களுக்கு பயிற்சி : மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

Training for Counting of Votes

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பார்வையாளர்கள், நுண் பணியாளர்கள் என மொத்தம் 1,433 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளதாகவும், அவர்களுக்கான பயிற்சி வரும் மே.29-ம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Training for Counting of Votes

மக்களவைத் தேர்தல்

ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பார்வையாளர், உதவியாளர் உள்ளிட்டவர்களை கணினி குலுக்கல் முறையில் முதல்கட்டமாக தேர்வு செய்யும் பணி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் இன்று (மே.27) நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  ஜெ.ராதாகிருஷ்ணன் ஜூன் 4-ம் தேதி வாக்கும் எண்ணும் பணி நடைபெற உள்ளது. அந்த வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு முதல்கட்ட கணினி குலுக்கல் முறை தேர்வு ன்று (மே., 27) நிறைவடைந்து அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

  • சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 3 மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கும் சேர்த்து நுண் பார்வையாளர்கள் 357 பேர் தேவை.
  • அதேபோல மேற்பார்வையாளர்கள் 374, உதவியாளர்கள் 380 பேர் தேவை.
  • இவர்களை கணினி குலுக்கள் முறையில் எந்தெந்த பகுதியில் எந்தெந்த மேஜையில் பணி செய்ய உள்ளார்கள் என்று வரிசைப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.
  • இவர்களுடன் அலுவலக உதவியாளர் 322 பேரையும் சேர்த்தால் மொத்தமாக 1,433 பேர் வாக்கு எண்ணும் பணிக்கு தேவைப்படுகினர்.
  • 3 வாக்கு எண்ணும் மையங்களையும் சேர்த்து, மே 29-ம் தேதி (புதன்கிழமை) வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

2-வது முறை ஜூன் 3-ம் தேதி காலை 8 மணி அளவில், யார் யார் எந்த மக்களவை தொகுதிக்குச் செல்கிறார்கள் என்றும், ஜூன் 4-ம் தேதி காலை 5 மணிக்கு எந்த மேஜைக்கு செல்வார்கள் என்றும் தேர்வு செய்து அவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

பாதுகாப்பு பணி

  • பாதுகாப்பு பணியில் தற்போது 3 சுற்றுகளில் 1,384 பேர் பணியாற்றி வருகின்றனர். வாக்கு எண்ணும் நாளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்படும் செய்யப்படும்.
  • தற்போது குயின் மேரிஸ் கல்லூரியில் 176 கேமராக்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் 210 கேமராக்கள், லயோலா கல்லூரியில் 198 கேமராக்கள் என மொத்தம் 584 கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன.
  • 106 கேமராக்கள் சென்னை வடக்கிலும், 132 கேமராக்கள் சென்னை தெற்கிலும், 107 கேமராக்கள் மத்திய சென்னையிலும் வாக்கு எண்ணிக்கைக்காக கூடுதலாக பொருத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment