தமிழகத்தில் ஜூன் 2 வரை மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Chennai Meteorological Department
தமிழகத்தில் சில இடங்களில் இன்று (மே 27) முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Department) அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் நேற்று நிலை கொண்டிருந்த ரீமல் புயலானது, வடக்கு திசையில் நகர்ந்து, நள்ளிரவு 12.30 மணி (27.05.2024) 3 மணி அளவில் வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரை அருகில் சாகர்தீவிற்கும் (மேற்கு வங்காளம்), கேப்புப்பாராவிற்கும் (வங்கதேசம்) இடையே கரையை கடந்தது. இதனிடையே, தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுகளில் வடமேற்கு / மேற்கு திசை காற்று நிலவுகிறது. தமிழகத்தில் இன்று (மே 27) ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலம் இட மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (மே 28) முதல் 30.05.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.