Posted on: May 27, 2024 Posted by: Brindha Comments: 0

திருப்பதி:  ஜூன் 30 ந்தேதி வரை விஐபி தரிசனம் ரத்து தேவஸ்தானம் அறிவிப்பு

Tirupati Devasthanam

கோடை கால பள்ளி விடுமுறையை முன்னிட்டு வழிபாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் மக்கள் அதிக அளவில் காணப்படுகின்றனர்.  திருப்பதியில் ஜூன் 30 ந்தேதி வரையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வி.ஜ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Tirupati Devasthanam

கோடை விடுமுறை துவங்கி உள்ள நிலையில், பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தினந்தோறும் திருப்பதியில் குவிந்து வருகின்றனர். இதனால் திருப்பதியில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் மேற்கொள்கின்றனர். 18 முதல் 20 மணி நேரம் வரையில் கூட தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், ஜூன் மாதம் 30 ந்தேதி வரை விஐபி தரிசனத்தை ரத்து ெய்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து பக்தர்களை மகிழ்ச்சி யடைய செய்துள்ளது.

வி.ஜ.பி. தரிசனம் ரத்து

அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருவதால் தினமும் 20,000 பேருக்கு ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன்களை திருப்பதி தேவஸ்தானமும் ஆன்லைனில் விற்பனை செய்து வருவதுடன் தினமும் 20,000 பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் இலவச டிக்கெட்டுகளையும் வழங்கி வந்தது. ஆனாலும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், வரும் ஜூன் 30-ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வி.ஜ.பி. தரிசனம் ரத்து செய்யப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதே சமயம் தரிசனத்திற்காக பல பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்றும், எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு நல்ல செய்தியாக வெளியாகியுள்ளது. இதன் மூலம் விரைவாக தரிசனம் மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment