தமிழ்நாடு மின்வாரிய சேவைகளையும் பெற புதிய வலைதளம் அறிமுகம்
Launch of New Website
தமிழ்நாடு மின்வாரியத்தில் புதிதாக மின் இணைப்பு பெறுதல், மின் கட்டணத்தை மாற்றி அமைத்தல், புதிய மீட்டர் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற முன்பு கடிதம் மூலம் விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்த நிலையில் மின்வாரியத்தின் அனைத்து சேவைகளையும் பெற புதிய வலைதள முகவரி அறிமுகப்படுத்தப்பட்டு (Launch of New Website) உள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தில் நுகர்வோருக்கு காலதாமதமும் அலைச்சலும் ஏற்பட்டது. அத்துடன், காகித பயன்பாடும் அதிகரித்ததையடுத்து, மின்வாரியம் தனது சேவைகளை பொதுமக்கள் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் சேவையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், சேவை விரைவாக வழங்குவ தற்காக www.tangedco.org என்ற வலைதள முகவரி அறிமுகப்படுத்தப்பட்டது.
சேவையை ெற ிரும்பும் நுகர்வோர், வலைதள முகவரி முகவரியில் சென்று பின்னர் சேவைகள் பிரிவுக்குள் சென்று விண்ணப்பிக்க வேண்டும். மின்வாரியம் அனைத்து வகையான விண்ணப்பத் தேவைக்கும் ஒரே வலைதள முகவரியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, https://app1.tangedco.org/nsconline/ என்ற வலைதள முகவரியில் சென்றால் மின்வாரியத்தின் அனைத்து சேவைகளைப் பெறுவதற்கான தகவல்கள், விண்ணப்ப படிவங்கள், தேவைப்படும் ஆவணங்கள், செலுத்த வேண்டிய கட்டணங்கள், கால அவகாசங்கள், விநியோக பிரிவுகள், விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கிடைக்கும் என தெரிவித்தனர்.