Posted on: May 18, 2024 Posted by: Deepika Comments: 0

அரசு மருத்துவமனை: பணிபுரியும் ஊழியர்களுக்கு ஷிப்ட் அடிப்படையில் பணி – அரசாணை வெளியீடு

Govt Hospital

அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் (Govt Hospital) பணிபுரியும் ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்த அரசாணையை தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

Govt Hospital

ஷிப்ட் Govt Hospital

  • காலை 6 மணி முதல் மணி 1 மணி வரை முதல் ஷிப்ட்,
  • மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை இரண்டாவது ஷிப்ட்,
  • இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை மூன்றாவது ஷிப்ட் என 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அரசாணை

உயர் நீதிமன்ற மதுரை கிளை ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அரசாணையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் வரும் அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலிய உதவியாளர் தரம் -2, மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஷிப்ட் அடிப்படையில் இனி பணி அமையும். முதல் ஷிப்ட்டில் 50 % பணியாளர்களும், மற்ற இரண்டு ஷிப்ட்களில் தலா 25 % பணியாளர்களும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவார்கள்” என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment