அமெரிக்கா, ஆப்ரிக்கா: பரவும் மஞ்சள் காய்ச்சல் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்
Epidemic Yellow Fever
அமெரிக்கா, ஆப்ரிக்கா மஞ்சள் காய்ச்சல் (Epidemic Yellow Fever) எதிரொலி காரணமாக இந்தியாவில் இருந்து ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுக்குச் செல்வோரும், அங்கிருந்து இந்தியா வருவோரும் மஞ்சள் காய்ச்சல்தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியாவிலிருந்து ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளுக்குச் செல்வோரும், அங்கிருந்து இந்தியா வருவோரும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சல், உடல் வலி, மஞ்சள் காமாலை ஆகிய அறிகுறிகள் ஏற்படும். தமிழகத்தில் 3 இடங்களில் மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. வெளிநாடு செல்பவர்கள் தயங்காமல் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை செலுத்தி பயனடைய முன்வர வேண்டும். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும் சென்னை கோட்டூர் புரத்தில் நிருபர்களிடம் மா.சுப்பிரமணியன் கூறினார்.