Posted on: May 8, 2024 Posted by: Brindha Comments: 0

நாளை மறுநாள் வெளியிடப்படும் ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

10th Exam Results

கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் (10th Exam Results) நாளை மறுநாள் வெளியாகவுள்ளது.

10th Exam Results

பத்தாம் வகுப்பு (S.S.L.C) பொதுத்தேர்வை சுமார் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வுகள் முடிந்ததும் ஏப்ரல் 12 – 22ஆம் தேதி வரை விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2024-ல் நடைபெற்ற 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு (S.S.L.C) பொதுத்தேர்வு முடிவுகள் 10.05.2024 (வெள்ளிக்கிழமை) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிடடுள்ளது.

https://www.tnresults.nic.in/

https://www.dge.tn.gov.in/

https://results.digilocker.gov.in/

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை மேற்காணும் இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். இணையதளங்கள் மூலம் மாணவர்கள் தங்களது ரிஜிஸ்டர் நம்பர் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தங்களது பள்ளிகளில் கொடுத்துள்ள மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் ரிசல்ட் அனுப்பி வைக்கப்படும்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment