Posted on: May 5, 2024 Posted by: Brindha Comments: 0

தமிழகத்தில் கனமழை வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

Chance of Heavy Rain

கோடை கால கத்தரி வெயில் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் 7, 8-ம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chance of Heavy Rain

தென்னிந்திய பகுதிகளின் மேல்வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒருசில இடங்களில் 7, 8-ம் தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

7-ம் தேதி தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், 8-ம் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 9, 10 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும். இன்று முதல் 8-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 109 டிகிரி, இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 104 டிகிரி, கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெயில் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment