Posted on: May 3, 2024 Posted by: Brindha Comments: 0

தமிழக உள் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு – வானிலை மைய இயக்குனர் அறிவிப்பு

Summer Rains in Tamil Nadu

கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது. கத்திரி வெயில் காலத்தில் முதல் 7 நாட்களுக்கு வெப்பம் அதிகளவில் இருக்கும் என்றும், உள் மாவட்டங்களில் கோடை மழை (Summer Rains in Tamil Nadu) பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Summer-Rains-in-Tamil-Nadu

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்:

கோடை மழை பெய்ய சென்னையில் தற்போதைய நிலவரப்படி வாய்ப்பு இல்லை. உள் மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை மழை வருகின்ற போது வெப்பத்தின் தாக்கம் குறையும். தமிழகத்தில் 6 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். கத்திரி வெயிலை பொறுத்தவரை முதல் ஒரு வாரத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் இருக்கும். கால நிலை மாற்றம் மட்டுமே வெப்ப அலைக்கு காரணம் இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் வெப்ப அலை பதிவாகியுள்ளது. உள் மற்றும் வட தமிழகத்தில் கூடுதல் வெப்பம் பதிவாகலாம். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெப்ப அலை அதிகரித்துள்ளது என்றார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment