Posted on: May 3, 2024 Posted by: Brindha Comments: 0

பழனி: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் வைகாசி விசாகத் திருவிழா

Vaikasi Visakha Festival

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா அறுபடை வீடுகளில் நடைபெறும். இந்த ஆண்டிற்கான விசாகத் திருவிழா வருகிற 16-ம் தேதி, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 21-ம் தேதி திருக்கல்யாணமும், 22-ம் தேதி வைகாசி விசாக தேரோட்டமும்  நடைபெறுகிறது.

Vaikasi Visakha Festival

பெரியநாயகி அம்மன் கொடியேற்றம்

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. 10 நாட்களும் வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமி சப்பரம், தந்தப் பல்லக்கு, தோளுக்கினியாள், தங்க குதிரை, வெள்ளி யானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளி மயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி திருவிழா நடைபெறும்.

திருக்கல்யாணம் Vaikasi Visakha Festival

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 21-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். மறுநாள் 22-ம் தேதி மாலை 4.30 மணிக்கு வைகாசி விசாக தேரோட்டம் நடைபெறுகிறது. பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, வீனை இன்னிசை, நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment