Posted on: April 17, 2024 Posted by: Brindha Comments: 0

தலைமை தேர்தல் அதிகாரியிடம் வியாபாரிகள் மனு

Traders Petition

ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த பிறகு, பணம் கொண்டு செல்வது தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Traders Petition

கடந்த மார்ச் 16-ம் தேதி மாலை மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அதிக அளவிலான நகைகள், பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக கொண்டு செல்லப்படும் பணத்துக்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, விதிகளை மீறி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால், வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை அடையாறு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் எம்.எஸ்.சந்திரசேகரன், கே.வீரையா, பி.கோதண்டபாணி உள்ளிட்டோர் நேற்று சந்தித்து மனு அளித்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது, தேர்தல் நடத்தை விதிமுறை கட்டுப்பாடு காரணமாக வியாபாரிகளால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை வெளியே கொண்டு செல்ல இயலவில்லை. இதனால், பொருட்களை கொள்முதல் செய்ய முடியவில்லை. கடை வாடகை, பணியாளர் ஊதியம் கூட தர முடியாத நிலையில் உள்ளோம். தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19-ம் தேதிக்கு பிறகு, விதிகளை தளர்த்த வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளோம் என்றனர்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment