ஏப்ரல் 17: விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கு நாளை விடுமுறை வழங்க அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
April 17: Govt School Teachers Association
10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்துதல் பணிகள் மாநிலம் முழுவதும் 88 மையங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் பள்ளிகள், விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கு நாளை (ஏப்ரல் 17) விடுமுறை வழங்க (April 17: Govt School Teachers) வேண்டுமென நேரடி நியமனம் பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்துதல் பணிகள் மாநிலம் முழுவதும் 88 மையங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து நிலை ஆசிரியர்களும் ஏப்ரல் 18, 19-ம் தேதிகளில் தேர்தல் பணிகளில் பங்கேற்க தயாராக ஏதுவாக விடைத்தாள் திருத்தும் முகாம்களுக்கும், பள்ளிகளுக்கும் நாளை (ஏப்ரல் 17) விடுமுறை வழங்க வேண்டும். ஏனெனில், புதன்கிழமை மாலை வரை பள்ளிகள் மற்றும் மதிப்பீட்டு முகாம்களிலும் பணி புரிந்து விட்டு, அதன்பின் வீட்டுக்கு சென்று மறுநாள் வாக்குச்சாவடி முகாம்களுக்கு செல்வதற்கு தேவையான பொருட்களை அவசரகதியில் எடுத்து வைக்க வேண்டியசூழல் உள்ளது. பதற்றமான மனநிலையில் பணிக்கு ஆசிரியர்கள் செல்வதை தவிர்க்கும் விதமாக விடுமுறை வழங்க வேண்டும். இது தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.