Posted on: April 23, 2024 Posted by: Brindha Comments: 0

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் 2,400 பேர் அனுமதி – உயர் நீதிமன்றம் உத்தரவு

Kallaghar River Landing:

மதுரையில் சித்திரை திருவிழாவில் (Kallaghar River Landing) போதுமான போலீஸ் பாதுகாப்பு, நடமாடும் மருத்துவ சேவை, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்  என சிவகங்கை மணிகண்டன், மதுரை ரமேஷ் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த நிலையில் ஆய்வு செய்த நீதிபதிகள் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

Kallaghar River Landing

நீதிமன்றம் உத்தரவு

  • சித்திரைத் திருவிழாவை அதிக கவனமாகவும், பாதுகாப்புடனும் நடத்த வேண்டும்.
  • அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையிலிருந்து விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
  • நீதிமன்றம் அறிவுறுத்தியதால் 400 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
  • பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளன.
  • தாழ்வாக செல்லும் மின்கம்பங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
  • அவசர மருத்துவ சிறப்பு முகாம்அமைக்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைகள் திருப்தி தருகின்றன.
  • கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடம் சிறியது என்பதால் கோயில் நிர்வாகம் தரப்பில் பாஸ் வழங்கப்பட்ட 2,000 பேர், பேட்ஜ் அணிந்த 400 பேர் என மொத்தம் 2,400 பேரை மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ள பகுதிக்குள் அனுமதிக்க வேண்டும்.
  • அவர்கள் தங்களுடன் யாரையும் அழைத்துச் செல்லக் கூடாது. இந்த விஷயத்தில் காவல்துறை எந்த சமரசமும் செய்யக் கூடாது. இந்த உத்தரவை கடுமையாகப் பின்பற்ற வேண்டும்.
  • கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வைப் பொறுத்தவரை, தோல் பைகளில் கைகளால் உருவாக்கப்படும் விசையைப் பயன்படுத்தி மட்டுமே தண்ணீரைப் பீய்ச்ச வேண்டும்.
  • சுத்தமான நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • அதைத் தவிர்த்து பிரஷர் பம்புகள் உள்ளிட்ட இயந்திரங்களைப் பயன் படுத்தினாலோ, நிறமிகள், பால், மோர் போன்றவற்றை கலந்து தண்ணீரை பீய்ச்சினாலோ அவர்கள் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • சித்திரை திருவிழாவை அதிக கவனம் மற்றும் பாதுகாப்புடன், அசம்பாவிதம் நிகழாதபடி நடத்த வேண்டும் உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment