Posted on: May 20, 2024 Posted by: Brindha Comments: 0

அரசுப் பள்ளி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு 13,484 பேர் விண்ணப்பம்

Teacher General Transfer Consultation

பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்  2 நாட்களில் 13,484 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 17-ம் தேதி நிறைவு பெறுகிறது.

Teacher General Transfer Consultation

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர் களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல்ஜூன் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் தொடங்கி தொடக்கக்கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 3,033 பேர், பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 1,790 பேர், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 891 பேர், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 155 பேர் என மொத்தம் 5,869 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டுள்ளன. இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 168 பேர், பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 4,375 பேர், முதுநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 2,748 பேர், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 178 பேர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 146 பேர் என 7,615 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது ஒட்டுமொத்தமாக 13,484 ஆசிரியர்கள் கடந்த 2 நாட்களில் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 17-ம் தேதி நிறைவு பெறுகிறது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment