Posted on: May 16, 2024 Posted by: Brindha Comments: 0

100 % தேர்ச்சி: அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா – பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

100 % Pass

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டு தமிழகத்தின் பல்வேறு  அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் தேர்வுகளில்  100 % தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து  அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை சென்னைக்கு அழைத்து பாராட்டு விழா நடத்தப்படும் என்றும், தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்த 43 மாணவர்களும் கவுரவிக்கப் படுவார்கள் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

100 % Pass

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 1,761 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை சென்னைக்கு அழைத்து பாராட்டு விழா நடத்தப்படும் என்றும், தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்த 43 மாணவர்களும் கவுரவிக்கப்படுவார்கள் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ச்சி சதவீதத்தில் கடைசி 5 இடங்களைப் பிடித்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு சாதனை படைத்த தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரயாட ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் முடிந்த பிறகு, ஜூன் மாதத்தில் இந்த விழா நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதுபோன்ற ஒரு விழா முதல் முறையாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment